வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை... இன்று உருவாகப்போகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
தமிழ்நாட்டில் கத்தரி வெயில் மழையுடன் தொடங்கியுள்ளது. அந்த வகையில் மே 16ம் தேதி முதல் லேசான மழைப் பொழிவு காணப்பட்டது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைபெய்து வெயில் குறைந்துள்ளது. அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை மே 27ம் தேதி தொடங்கலாம் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் மே 25ம் தேதி தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 4 அல்லது 5 நாட்களில் தொடங்கிவிடும். இது தமிழகத்தின் சில பகுதிகளில் பரவும். அதே நேரத்தில் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா, வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன்காரணமாக இன்று (புதன்கிழமை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது நாளை காற்றத்தழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும்.

இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும். இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
