நாளை வங்கக் கடலில் புதிய தாழ்வுப் பகுதி ... 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை!
வங்கக் கடலில் நாளை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் விளைவாக உருவாகும் இந்த மண்டலம், முதலில் தென்மேற்கு வங்கக் கடலில் வலுப்பெற்று, பின்னர் வடமேற்கே நகர்ந்து தமிழ்நாடு–இலங்கை கடற்கரை பகுதிகளை நோக்கி வர வாய்ப்பு உள்ளது.

இதன் தாக்கத்தில் அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 22-ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

23 மற்றும் 24-ஆம் தேதிகளிலும் இதே போன்று மழை தொடரும் எனவும், குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒவ்வொரு நாளும் இடி, மின்னலுடன் கூடிய மழை தொடர்ந்து வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
