நாளை வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு!?

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் மீண்டும் வானிலை மாற்றம் உருவாகிறது. தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நாளை (பிப்.15) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் கிழக்கு பகுதிகளில் நிலவும் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இதன் தாக்கத்தால் தமிழகத்தில் நாளை முதல் 18-ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பிப்.19-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசான மழையும், 20-ம் தேதி சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இதற்கிடையில் வட தமிழக மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்கள் மிதமான பனிமூட்டம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகாலை பயணங்களில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!