வங்கக்கடலில் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ... ?

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று உருவான இந்த காற்றழுத்தம் இன்று காலை அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிப்ரவரி 20ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பிப்ரவரி 19 மற்றும் 20ஆம் தேதிகளில் வட தமிழக மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 18 முதல் 22ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!