வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இலங்கை–தமிழக கடற்கரை நோக்கி நகரும் என ‘டெல்டா வெதர்மேன்’ ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தெற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான இந்த தாழ்வு, அடுத்த 48 மணி நேரத்தில் கடற்கரை நோக்கி நகர்ந்து பின்னர் ஆழ்கடல் பகுதிக்கே திரும்பும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (பிப்.20) இரவு வரை வறண்ட வானிலை நீடிக்கும். பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழிவு மற்றும் குளிரும் தொடரும். ஆனால் தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் பிப்.21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மழையின் தீவிரம் குறைவாக இருந்தாலும், அறுவடை பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும். எனவே சம்பா, தாளடி அறுவடை மேற்கொள்ளும் விவசாயிகள் பிப்.20க்குள் பணிகளை முடிக்கலாம் என்றும், அறுவடை செய்த தானியங்களை மழைச்சாரல் படாதவாறு பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
