காற்று மாசுவால் நுரையீரல் நோய்: அமைச்சர் அதிர்ச்சி தகவல்...!
மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் இணை அமைச்சர் கீர்த்தீ வர்தன்சிங் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசுக்கும் நுரையீரல் நோய்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தும் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்று அவர் தெளிவாக தெரிவித்துள்ளார். உயர்ந்த காற்று தரக் குறியீடு (AQI) மட்டுமே நுரையீரல் நோய்களுக்கு காரணம் என்று கூற முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

அதே நேரத்தில், காற்று மாசு சுவாச நோய்களைத் தூண்டும் ஒரு காரணியாக இருக்கலாம் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். நுரையீரல் நார்மைசை, COPD, எம்ஃபிசிமா போன்ற நோய்களைத் தடுப்பதற்காக தேசிய காற்று மாசு கட்டுப்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அரசு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி, தகவல் பரிமாற்ற திட்டங்களும் செயல்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு கடுமையாக இருக்கும் நிலையில் இந்த பதில் வெளியாகியுள்ளது. இதனால் மருத்துவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகள் காற்று மாசு பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களுக்கு முக்கிய காரணம் என்று எச்சரித்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த கருத்து பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
