வாட்ஸ்அப் விளம்பர ஆசை… பறிபோன ரூ.28 லட்சம் !

 
வாட்ஸ் அப்
 

சென்னை ஆவடி பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசைன், வாட்ஸ்அப்பில் வந்த ஒரு விளம்பரத்தை நம்பி தொடர்பு கொண்டார். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டிய மர்ம நபர்கள், எட்டு தவணைகளில் ரூ.28.70 லட்சத்தை முதலீடு செய்ய வைத்தனர். பின்னர் பணத்தை திரும்ப பெற முயன்றபோது முடியாமல் போக, தன்னை ஏமாற்றியதை உணர்ந்து மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

வாட்ஸ் அப்

புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, மோசடிக்காக போலி வங்கி கணக்குகள் தயாரித்தவர்களையும், கமிஷன் பெற்று தரகராக செயல்பட்டவர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடி வலையில் பலர் தொடர்புடையது தெரிய வந்தது.

வாட்ஸ் அப்

இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட வங்கதேசம் மற்றும் இலங்கை நாட்டு நபர்கள், போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு தப்ப முயன்றது அம்பலமானது. வாட்ஸ்அப் விளம்பரங்களை நம்பி முதலீடு செய்வது ஆபத்து என்பதை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!