சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து... ஒருவர் பலி, 20 பேர் காயம்!

 
பெருந்துறை


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெருந்துறை

கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று இன்று காலை ஈரோடு மாவட்டம் , பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சென்ற போது, இரு சக்கர வாகனம் ஒன்று சாலையைக் கடக்க முயற்சித்தது.

இதில் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் முயற்சித்ததில், சொகுசு பேருந்தில் பின்னால் வந்துக் கொண்டிருந்த அரசு பேருந்து சொகுசு பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பேருந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

விபத்து

இரு சக்கர வாகனத்தில் வந்த பெருந்துறையைச் சேர்ந்த குப்பன் (65) என்பவர் இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web