அடுத்தடுத்து மோதிய சொகுசு பேருந்துகள்… தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு!

 
bus

மதுராந்தகம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சொகுசு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்தில் தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதற்கான போதிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாததே விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் சாலைப் பணிகள் தெளிவாக தெரியாததால், வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விபத்தால் மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். எச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!