மழைநீரில் சிக்கிய சொகுசு கார்… 3 பேருடன் கதவு மூடியதால் சென்னையில் பரபரப்பு !
சென்னை பெரம்பூரில் முரசொலிமாறன் மேம்பாலம் கீழ் தேங்கிய மழைநீரில் சொகுசு கார் பழுதாகி நின்றதால், இரும்பு வியாபாரி அரசு, அவரது மனைவி, 10 வயது மகன் ஆகியோர் காருக்குள் சிக்கி தவித்தனர். இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடுங்கையூர் விவேகானந்தா நகரை சேர்ந்த அரசு, குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு அதிகாலை 3 மணியளவில் பெரம்பூர் வழியாக வந்துள்ளார். அப்போது சுரங்க பாதையில் 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கி இருந்தது. அதை கடக்க முயன்ற போது கார் திடீரென பழுதாகி நின்றது. அதோடு அனைத்து கதவுகளும் லாக் ஆகி, உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மழைநீரில் இறங்கி கார் கதவுகளை திறக்க உதவினர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து, சர்வீஸ் ஊழியர்கள் உதவியுடன் காரை அப்புறப்படுத்தினர். பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
