தாய் கதறல் வாக்குமூலம்... 9ம் வகுப்பு மாணவனை கடத்தி கொலை செய்த நண்பர்கள்!

 
மாணவனை கடத்தி கொலை செய்த நண்பர்கள்

டெல்லியில் வசீராபாத் பகுதியில்  16 வயதுடைய பள்ளி மாணவனை 3 சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து கடத்தி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  9ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவன், ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்களிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.  நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்ட சிலர் 10 லட்ச ரூபாய் பணம் கொடுக்கா விட்டால் உங்கள் மகனை கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தாய் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.


பின்னர் போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டதில்3 சிறுவர்களுடன் ஜரோடா புஷ்தா சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றதாக தெரியவந்தது. இதில் இரண்டு பேரின் வயது 16 மற்றும் 17 என குறிப்பிடப்படுகிறது. போலீசார் சந்தேகத்தின் பேரில் மூன்று சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில்  அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள், பள்ளி மாணவனை வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று, அங்கு கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக தெரிகிறது.  
ஒரு நாள் கழித்து, அவர்கள் மாணவனின் சிம்கார்டை பயன்படுத்தி அவரது தந்தைக்கு அழைத்து, ரூ.10 லட்சம் பிணை தொகை கேட்டுள்ளனர். அந்த சிறுவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் மாணவனின் உடலை பல்ஸ்வா ஏரிக்கரையில் வனப்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். மேலும், மாணவனின் உடலை துண்டிக்கவும் அந்த சிறுவர்கள் முயற்சி செய்ததாகவும் தெரிகிறது. இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?