மாசித் தேரோட்டம்... திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவிழா காலங்களில் அம்மன் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பட்டு வெளிவீதி நான்கிலும் பவனி வந்து மீண்டும் 7.40 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!