அரசு பெண் ஊழியர்களுக்கு குட்நியூஸ்: 3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் விடுப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழக அரசின் அடிப்படை விதிகளுக்கும் அப்பாற்பட்டு, பெண் ஊழியர்களின் நலன் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு இந்த முக்கியத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பி. மங்கையர்க்கரசி என்பவர், தனது மூன்றாவது பிரசவத்திற்குப் பேறுகால விடுப்பு கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். தமிழக அரசின் நடைமுறையிலுள்ள அடிப்படை விதிகளின்படி, இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பேறுகால விடுப்பு வழங்க முடியும் என்றும், மூன்றாவது குழந்தைக்கு வழங்க முடியாது என்றும் பொதுவாகக் கருதப்படுகிறது.

நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஷமிம் அகமது அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: மனுதாரருக்கு உரிய பணப்பலன்களுடன் (சம்பளத்துடன்) ஓராண்டு காலம் பேறுகால விடுப்பு வழங்க உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.
தமிழக அரசின் விதிமுறைகளில் முரண்பாடு இருந்தாலும், மூன்றாவது பிரசவத்திற்கு விடுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஏற்கனவே பலமுறை உத்தரவிட்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். இனிமேல் இது போன்ற கோரிக்கைகளுக்காக ஊழியர்கள் நீதிமன்றத்தை நாடாத வகையில், அனைத்து மாவட்ட நீதிமன்றப் பதிவாளர்களுக்கும் உரிய சுற்றறிக்கையை அனுப்ப உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கு ஆணையிடப்பட்டது.

உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை அனைத்துத் துறைச் செயலாளர்களும், துறைத் தலைவர்களும் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு தமிழகத் தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
