சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் தூக்கிட்டு தற்கொலை!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற (ஐகோர்ட்) வழக்கறிஞர் ஒருவர், மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சலில் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷணை வெள்ளவாரி ரோடு பகுதியைச் சேர்ந்த சாமிசந்திரன் (38), சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த காமாட்சி என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்குக் குழந்தை இல்லை.
இந்நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பச் சண்டை காரணமாக, காமாட்சி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் வழக்கறிஞர் சாமிசந்திரன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று சாமிசந்திரன் வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்துத் தகவல் அறிந்த ரோஷணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர் சாமிசந்திரன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதற்கான சரியானக் காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
