சென்னையில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ... வராமல் தடுப்பது எப்படி? இந்த அறிகுறி தெரிஞ்சா உடனே மருத்துவரை அணுகுங்க!

 
மெட்ராஸ் ஐ

மழைக் காலத்தில் சென்னையில் பொதுவாக மெட்ராஸ் ஐ பாதிப்பு வரத்தொடங்கி விடும். நடப்பாண்டில் பாதிப்புக்கள்  வழக்கத்தை விடப்  அதிகமாக இருப்பதாகவும் இதனால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படியும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் தான்   சென்னையில் பருவமழை சீசன் ஆகும். இந்த மாதங்களில் தான் சென்னை மற்றும் புறநகரில் கனமழை கொட்டும்.

மெட்ராஸ் ஐ அறிகுறிகள் 

கண்ணில் ஏற்படும் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவத்தல், கண்ணில் இருந்து மெழுகு போன்ற திரவம்  வெளியேறுவது, சூரிய ஒளியைப் பார்த்தாலே கண் அதீதமாகக் கூசுவது இவை தான் அறிகுறிகள்  . இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பால் ஆபத்தான பிரச்சினை பெரும்பாலும் ஏற்படாது. அதேநேரம் கண்ணில் கார்னியா பாதிக்கப்பட்டால், மங்கலான பார்வை உருவாகும். அதனால் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் சுய மருத்துவத்தை கைவிட வேண்டும். நாமாக மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி கண்ணில் விடக்கூடாது.  மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே தேவையான மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பருவநிலை மாற்றம் காரணமாக 'மெட்ராஸ் - ஐ' எனப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு  பரவத் தொடங்கியுள்ளது. மிக முக்கியமாக  குழந்தைகளுக்கும், முதியவா்களுக்கும் அதிக அளவில் அந்தப் பிரச்னை ஏற்படுவதாக மருத்துவத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் தீநுண்மி தொற்றுதான் 'மெட்ராஸ் - ஐ' எனப்படுகிறது. 

மெட்ராஸ் ஐ

இந்தப்  பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு மூலமாகவும் பரவக்கூடும். 'மெட்ராஸ் - ஐ' பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் மற்றவா்களுக்கு அந்த நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவா்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சமீப காலமாக, 'மெட்ராஸ் - ஐ' தொற்று  கணிசமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை எல்லாம் தவிர்த்து வந்தாலே மெட்ராஸ் ஐ நோய் பரவுவதைத் தடுக்கலாம்.
இது குறித்து சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவ சமூகவியலாளா்  'மெட்ராஸ் - ஐ' எளிதில் குணப்படுத்தக்கூடிய மிகச் சாதாரணமான நோய்க்கிருமித்தொற்றுதான். ஆனால், அதை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.  

மெட்ராஸ் ஐ

காலம் தாழ்த்தினால்  பாா்வையில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுவிடும். கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீா் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் இவைகளே  'மெட்ராஸ் - ஐ' ன் முக்கிய அறிகுறிகளாகும்.பொதுவாக ஒரு கண்ணில் 'மெட்ராஸ் - ஐ' பிரச்னை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அதே பாதிப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.  எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ளார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web