மதுரை மாவட்டத்தில் 10 துணை வட்டாட்சியர்களுக்குப் பதவி உயர்வு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

 
மதுரை ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றி வந்த 10 துணை வட்டாட்சியர்களுக்குத் தற்காலிக வட்டாட்சியர்களாகப் பதவி உயர்வு அளித்து மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தப் பதவி உயர்வுடன், அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள புதிய இடங்கள் குறித்த விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்காலிக வட்டாட்சியர்களாகப் பதவி உயர்வு பெற்று, புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள 10 அதிகாரிகளின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது: கு. கமலேஷ் (மதுரை டாஸ்மாக் உதவி மேலாளர்) - மதுரை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகத் தனி வட்டாட்சியர்

ஞா. சித்ரகலா (கல்லக்குடி வட்ட வழங்கல் அலுவலர்) - உசிலம்பட்டி தனி வட்டாட்சியர்

க. தாணுமூர்த்தி (உசிலம்பட்டி தலைமையிடத்து துணை வட்டாட்சியர்) - மதுரை விமான நிலைய விரிவாக்கத் தனி வட்டாட்சியர்

வீ. சுந்தரவேல் (மதுரை மேற்கு தலைமையிடத்து துணை வட்டாட்சியர்) - மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் அலுவலகத் தனி வட்டாட்சியர்

ரா. தாமோதரன் (உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக தலைமை உதவியாளர்) - தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கழகம் (மதுரை) தனி வட்டாட்சியர்

ச. முகிபாலன் (மதுரை கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர்) - மதுரை நெடுஞ்சாலைகள் அலுவலகத் தனி வட்டாட்சியர்

ஆ. நாகராணி (வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர்) - மதுரை மேற்கு நகர நிலவரித் திட்டத் தனி வட்டாட்சியர்

ச.ந. மகேந்திரபாபு (உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர்) - மதுரை மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத் தனி வட்டாட்சியர்

அ. பிரேம்கிஷோர் (மதுரை மாவட்டக் கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர்) - மதுரை நெடுஞ்சாலைகள் அலுவலகத் தனி வட்டாட்சியர்

ஜெ. கார்த்திகேயன் (மதுரை மாவட்டக் கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர்) - மதுரை மாவட்டச் சிறப்பு வருவாய் அலுவலர் (நில எடுப்பு) தனி வட்டாட்சியர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!