மூச்சு திணறும் மதுரை... இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.. களைகட்டும் முருகர் மாநாடு!

 
போக்குவரத்து மாற்றம்

மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு  நடைபெற்று வருகிறது. இதற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக  போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். 

 ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு

இதனால்  போக்குவரத்து இடையூறின்றி இலகுவாக சென்று வருவதற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம்  தென் மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் விரகனூர் சந்திப்பில் இருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முருகன்

சரக்கு வாகனங்களுக்கு மாற்றுப் பாதையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரில் பி.சி. பெருங்காயம் சந்திப்பில் இருந்து விழா நடைபெறும் இடமான கலைஞர் திடல் வழியாக விரகனூர் ரவுண்டானா சந்திப்பிற்கு செல்லக்கூடிய பொதுமக்களின் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் பி.சி. பெருங்காயம் சந்திப்பில் இருந்து கருப்பாயூரணி, ஒத்த வீடு , வழியாக விரகனூர் ரவுண்டானா செல்ல வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது