களைக்கட்டுது மதுரை... இன்று பாரம்பரிய உணவுத் திருவிழா... முழு விவரம்!

 
மீன் பிரியாணி

இன்று மதுரை களைக்கட்டுது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களின் உள்ள சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களின் மக்கட்காட்சி “மதி கண்காட்சி (S A R A S மேளா)” மற்றும் உணவுத் திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம். 

இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் மதுரை நகரைத் தளமாக கொண்டு, தமுக்கம் திடலில் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊரக வளர்ச்சித் துறையினும், தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வழியாகவும், மாநிலங்களுக்குமிடையிலும் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த மேளா, பெண்கள் உறுப்பினர்கள் தயாரித்த பல்வேறு வகையான பொருட்களை ஒரே மைதானத்தில் காணும் அரிய வாய்ப்பாகும்.

உணவு வகைகள்

மதி கண்காட்சியில் மாவட்டங்களிலிருந்து பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் இடம் பெறுகின்றன. மூலிகைப் பொருட்கள், சுடுமண் பொம்மைகள், துணிகள், பட்டுப் புடவைகள், எம்ப்ராய்டரி ஆடைகள், கைத்தறி துண்டுகள், கைவினைப்பொருட்கள், மரச் சிற்பங்கள், நூல்திற்புகள், உலர் மீன்கள், மிளகு போன்ற பொருட்கள் விற்பனைக்காக நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் பங்கேற்கும் வகையில், குஜராத்தின் அகர் பத்திகள், வாசனை திரவியங்கள், ஆந்திரத்தின் மரச்சிற்பங்கள், மேற்கு வங்காளத்தின் ஆபரணங்கள், புதுச்சேரியின் தேன், தெலுங்கானாவின் கைத்தறி ஆடைகள் மற்றும் மகாராஷ்டிரத்தின் மூங்கில் கைவினைப் பொருட்கள் போன்றவைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

உணவுத் திருவிழாவுக்காக தனித்துவமான 50 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கேரளாவைச் சார்ந்த பாரம்பரிய உணவுகள் வன சுந்தரி சிக்கன், மூங்கில் அரிசி பாயாசம், நைபத்திரி, சுக்கு காபி போன்றவை விருப்பமானதாக அமைகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் வழங்கும் 100 க்கும் மேற்பட்ட உணவுப் வகைகள், கொங்கு மட்டன் பிரியாணி, மீன் நக்கெட்ஸ், புட்டு அரிசி, மீன் பிரியாணி, செட்டிநாட்டு ஸ்நாக்ஸ், தினை சிற்றுண்டிகள், எண்ணெய் பரோட்டா, நெய் சாதம், முதலியன உடனடித் தயாரிப்பு முறையில் வழங்கப்படும்.

உணவு வகைகள்

மேலும் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் “Ready to Eat” வகைகளும் உள்ளன. நிலக்கடலை பர்ஃபி, தினை லட்டு, மூலிகைப் பானங்கள், ஏலக்காய் பர்ஃபி, வீட்டில்தயாரிக்கப்பட்ட சாக்லேட் வகைகள், தினை தின்பண்டங்கள், வாழை சிப்ஸ், கப் கேக்குகள், பிரவுன் கேக், மணப்பாறை முறுக்கு ஆகியவையும் உள்ளன. இது பெண்கள் குழுக்களின் சுகாதாரமான முறையில் தயாரிப்பு, சரியான வகையில் விற்பனை ஆகியவற்றை முன்னிறுத்துகிறது.

மேலும் நிகழ்ச்சி வரிசையில் மாலை நேரங்களில் மாணவ–மாணவியர் கலந்த கலை நிகழ்ச்சிகள் – தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், தெருக்கூத்து, பரதநாட்டு, குழுநடனம், நாதஸ்வரம், தவில் இசை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள், நாடகங்களும் நடைபெறுகின்றன. இந்த மதி கண்காட்சி மற்றும் உணவுச் திருவிழாவிற்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து, பல்வேறு மாநில மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை வாங்கி, சுவையுடன் உணவுகளை அனுபவித்து மகிழ்ந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!