களைகட்டும் சித்திரைத் திருவிழா... மே 8ம் தேதி மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்!

இந்நிலையில், மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெறுவது குறித்து கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.200, ரூ.500 மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள்.
அதன்படி, மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை மே 8ம் தேதி காண பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 என இருவகையான டிக்கெட்டுகள் கிடைக்கிறது. ரூ.200, ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணச்சீட்டு பெறாதவர்கள் இடவசதிக்கு ஏற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர்.
திருக்கல்யாணம் காணவிருக்கும் பக்தர்கள் hrce.tn.gov.in மற்றும் maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற இணையதளங்களில் ஏப்ரல் 29 முதல் மே 2 வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ரூ.500 கட்டணச்சீட் டு ஒரு நபருக்கு இரண்டும், ரூ.200 கட்டணச்சீட்டு 3ம் பெற்றுக்கொள்ளலாம். ஒருவரே இரண்டையும் பெற இயலாது. இந்த டிக்கெட்டை பெற, ஆதார், மொபைல் எண், அடையாள அட்டை உட்பட பல தகவல்களை அளிக்க வேண்டும். கோயில் அருகே மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் விடுதியில் நேரடியாகவும் கட்டணச்சீட்டை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!