மதுரை கூடலழகர் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா தொடக்கம்!

 
madurai

கூடலழகர் பெருமாள் கோயில்வில் மாசி மகம் தெப்பத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தப் பிரசித்தி பெற்ற கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். மேளதாளங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட கொடி பல்லக்கில் கொண்டு வரப்பட்டு, வேதமந்திரங்கள் ஒலிக்க அலங்கரிக்கப்பட்ட மரத்தில் ஏற்றப்பட்டது.

பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கூடலழகர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  மார்ச் 2ம் தேதி கோயிலில் இருந்து புறப்பாடாகி டவுன் ஹால் ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளுகிறார். அங்கு பல்லக்கில் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தெப்ப உற்சவத்திற்காக தெப்பம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரவு 7.45 மணிக்கு தெப்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது தங்க சிவிக்கையில் உபய நாச்சியாருடன் பெருமாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!