மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு... கோடிக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மகா கும்பமேளா ஜனவரி 14ம் தேதி தொடங்கிய நிகழ்வு தொடர்ந்து 45 நாட்கள் இன்று பிப்ரவரி 26ம் தேதி புதன்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. இதற்காக 10000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25000 தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் இவைகளை மாநில அரசு அமைத்துள்ளது. இதுவரை 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியிருப்பதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஒன்றரை மாதமாக விமரிசையாக நடந்து வரும் கும்பமேளா, மகா சிவராத்திரி தினமான நாளை பிப்ரவரி 26ம் தேதி நிறைவடைகிறது. நிறைவு நாளான இன்று, உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரயிலில் வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. இது குறித்து மகா கும்பமேளா சிறப்பு டிஐஜி வைபவ் கிருஷ்ணா "திரிவேணி சங்கமத்தில் பிப்ரவரி 24ம் தேதி மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். நிறைவு நாளான இன்று பிப்ரவரி 26ம் தேதி கும்பமேளாவில் அதிக அளவிலான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!