மகா கும்பமேளா ஒற்றுமைக்கான மாபெரும் யாகம்... பிரதமர் மோடி பெருமிதம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி 13ம் தேதி தொடங்கி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. பூரண கும்பமேளா எனவும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது மகா கும்பமேளா எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதுக்கள், துறவிகள், மடாதிபதிகள் பிரயாக்ராஜ் நகரில் வந்து தங்கினர்.
அவர்கள் முக்கிய நாட்களாக கருதப்படும் அமிர்த ஸ்நான நாட்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, சிறப்பு பூஜைகளை செய்தனர். பிரதமர் மோடி, வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்-நடிகைகள், தொழில் அதிபர்கள் உட்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடியுள்ளனர். இதுதவிர தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, வழிபாடுகளை நடத்தினார்கள். 45 நாட்கள் கோலாகலமாக நடந்து வந்த மகா கும்பமேளா, சிவராத்திரி தினமான நேற்றுடன் நிறைவடைந்தது. எனவே நிறைவுநாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஒரே நாளில் திரிவேணி சங்கமத்தில் 1 கோடியே 32 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவில் 66 கோடியே 21 லட்சம் பக்தர்கள் புனித நீராடி இருப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமைக்கான மாபெரும் யாகமான மகா கும்பமேளா நிறைவடைந்துள்ளது. பிரயாக்ராஜில் நடந்த ஒற்றுமைக்கான மகா கும்பமேளா 140 கோடி மக்களின் நம்பிக்கை. 45 நாட்களில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரயாக்ராஜில் கூடியது மிகப்பெரியது. நினைத்ததை விட அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்தியா இப்போது புதிய சக்தியுடன் முன்னேறி வருகிறது. மகாகும்பமேளாவுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு சாதனையை படைத்துள்ளது. மகா கும்பமேளா வெற்றிகரமாக முடிந்ததற்கு காரணமாக இருந்த உத்திரப்பிரதேச அரசு, துப்புரவு ஊழியர்கள், காவல்துறையினர், ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்கள் என அனைவரையும் பாராட்டுகிறேன் எனக் கூறப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!