மகா சிவராத்திரி... ராமேஸ்வரத்தில் குவியும் பக்தர்கள்... நாளை வெள்ளித் தேரில் வீதியுலா!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மகா சிவராத்திரி திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இன்று காலை முதலே சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாள் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை பிப்ரவரி 15ம் தேதி வெள்ளி தேரில் வீதியுலா வருகிறார். நாளை மறுதினம் பிப்ரவரி 16ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும்.

திருவிழா பிப்ரவரி 19-ஆம் தேதி சண்டிகேஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியுடன் நிறைவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இரவு காலத்தில் ஆன்மீக சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
