மகா சிவராத்திரி... நாடு முழுவதும் தலைமை அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை!

 
அஞ்சலகம்

வரவிருக்கும் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் அஞ்சலகங்களில் மீண்டும் கங்கை நதி நீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. புனித கங்கை நீரை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர்(பொறுப்பு) சி.முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "உத்திரகாண்ட் மாநிலம் கங்கோத்திரி மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதி நீர், சுத்திகரிப்பு செய்யப்பட்டு நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது. 

கங்கை நீர்

இந்த கங்கை நீர் பாட்டில்களின் சிறப்பு விற்பனை தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதத்தில் வருகின்ற மகாசிவராத்திரியை முன்னிட்டு பொதுமக்கள் இப்புனித நீரை எளிதில் பெறும் வகையில் கங்கை நதி நீர் சிறப்பு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கங்கை நீர்

250மி.லி அளவு கொண்ட ஒரு பாட்டில் கங்கை நதி நீர் ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சுப நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குதல், புதுமனைப்புகுதல் போன்ற தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web