மகா சிவராத்திரி... சதுரகிரியில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!

 
சதுரகிரி
இன்று பிப்ரவரி 26ம் தேதி மகா சிவராத்திரி விழாவினை முன்னிட்டு அதிகாலை முதலே விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில்,  சதுரகிரியில் மலையேறி சென்று தரிசிக்க பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்து வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பெளர்ணமி, பிரதோஷ நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்லும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு விடுவதுண்டு. பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என குறிப்பிடப்பட்ட சில நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழைப்பொழிவு இருப்பின் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை.  

சதுரகிரி

அந்த வகையில் மாசி மாத மகாசிவராத்திரி, அமாவாசை மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு பிப்ரவரி 28ம் தேதி வரை பக்தர்கள் மலையேற சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் சதுரகிரியில் குவிந்து வருகின்றனர்.

இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 7 மணி முதல் பிற்பகல்  12 மணி வரை மலையேறலாம். எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்கு எடுத்து வரக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web