மகா சிவராத்திரி.. ஆறு கால பூஜைகள்? எப்படி விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள்? இதை மிஸ் பண்ணாதீங்க?

 
வில்வம் சிவன் சிவபெருமான் பிரதோஷம்

மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், வருடத்திற்கொரு முறை மகா சிவராத்திரியன்று மட்டுமாவது சிவனை வழிபட மிஸ் பண்ணாதீங்க. ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல், விஞ்ஞான ரீதியாகவும், மஹா சிவராத்திரியன்று நம்முடைய முதுகு தண்டுவடம் வளையாமல் நேராக நிமிர்ந்து இருப்பது ஆன்மிக, ஆரோக்கிய பலத்தைத் தரும். அதனால் தான் இந்துக்கள் அன்றைய தினம் தூக்கத்தைத் துறந்து சிவ வழிபாடு நல்லது என்று ஆறு கால பூஜைகளையும் ஒவ்வொரு சாமத்திலும் வகுத்து வைத்தார்கள். 

ஒவ்வொரு வருஷமும், பால்குண மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி அன்று மகா சிவராத்திரி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி (மாசி 6ம் தேதி) மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. 

maha-shivaratri

இந்த வருடம் பிரதோஷமும், மகா சிவராத்திரியும் ஒரே நாளில் வருவது அத்தனை விசேஷமானது. அதுவும் இம்முறை சனிக்கிழமையில் பிரதோஷம் வருவதால், சனி பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.  அம்மனுக்கு நவராத்திரி, சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

  1. நித்திய சிவராத்திரி
  2. மாத சிவராத்திரி
  3. பட்ச சிவராத்திரி
  4. யோக சிவராத்திரி
  5. மஹா சிவராத்திரி

இதில் மஹா சிவராத்திரி சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் காலமான மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி அன்று வருகிறது. மஹா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களைப் போக்கும்.

மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருக்கும். அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடியவிடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும்.

maha-shivaratri

மகா சிவராத்திரி எப்போது?

இந்த ஆண்டு, மகா சிவராத்திரிக்கான உகந்த நாள் பிப்ரவரி 18-ம் தேதியாகும். அன்று சனிக்கிழமை இரவு 08.02 மணிக்கு தொடங்குகிறது. மறுநாள் பிப்ரவரி 19, ஞாயிறு, மாலை 04:18 மணிக்கு முடிவடையும்.

விரதம் இருக்கும் நேரமும் முடிக்க வேண்டிய நேரமும்

பிப்ரவரி 18-ம் தேதி மகா சிவராத்திரி விரதத்தைத் தொடங்குபவர்கள் மறுநாள் பிப்ரவரி 19 ஆம் தேதி அதை முடிப்பார்கள். பிப்ரவரி 19-ம் தேதி மகா சிவராத்திரி பாரணம் காலை 06.59 மணிக்கு தொடங்கி மதியம் 03.24 மணிக்குள் எந்த நேரத்திலும் முடிக்கலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web