மகா சிவராத்திரி விரத முறைகளும் பலன்களும்... வீட்டில் பூஜை செய்வது எப்படி? என்னென்ன பலன்கள்?!
இந்த ஆண்டு மகா சிவராத்திரி வரும் பிப்ரவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அன்று சிவபெருமானின் அருள் பெற மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் குறித்து பார்க்கலாம் வாங்க. புராணங்களின்படி, பிரளய காலத்தின் போது உலகைக் காக்க உமையன்னை சிவபெருமானை வழிபட்ட இரவே மகா சிவராத்திரி. அன்று ஒரு நாள் விரதம் இருப்பது ஓராண்டு முழுவதும் சிவனை வழிபட்ட பலனைத் தரும்.

சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து புண்ணிய தீர்த்தங்களிலோ அல்லது வீட்டிலோ நீராடி, தூய்மையான ஆடை அணிய வேண்டும். அன்று முழுவதும் திரவ உணவுகள் (பால், பழச்சாறு) மட்டும் அருந்தி உபவாசம் இருப்பது சிறப்பு. உடல்நிலை ஒத்துழைக்காதவர்கள் ஒருவேளை மட்டும் பழங்களை உண்ணலாம். சிவராத்திரி இரவில் நான்கு ஜாமங்களிலும் சிவனுக்கு நடைபெறும் அபிஷேகங்களைத் தரிசிப்பது மிக முக்கியம்:

முதல் ஜாமம் மாலை 6 மணிக்கு பால் அபிஷேகம். இரண்டாம் ஜாமம் இரவு 9 மணிக்கு தயிர் அபிஷேகம். மூன்றாம் ஜாமம் நள்ளிரவு 12 மணிக்கு நெய் அபிஷேகம். நான்காம் ஜாமம் அதிகாலை 3 மணிக்கு தேன் அபிஷேகம். இரவு முழுவதும் தூங்காமல் "ஓம் நமச்சிவாய" மந்திரத்தைச் சொல்லியோ அல்லது தேவாரம், திருவாசகம் படித்தோ கண் விழிக்க வேண்டும்.
சிவராத்திரி விரதம் இருப்பவர்களுக்கு மோட்சம் கிடைப்பதுடன், இல்லத்தில் அமைதியும், தீராத நோய்களில் இருந்து விடுதலையும் கிடைக்கும் என ஆன்மீக நூல்கள் கூறுகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
