விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க துணை முதல்வர் அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் பயணம் செய்தார். பாராமதி பகுதி அருகே விமானம் தரையிறங்க முயன்றபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.
#WATCH | A plane crash reported in Baramati, Maharashtra. More details awaited.
— ANI (@ANI) January 28, 2026
Visuals from the spot. pic.twitter.com/xkx0vtY5cp
விபத்துக்குள்ளான விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இன்று காலை 8.45 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. அவருடன் பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் பயணித்தனர்.
67 வயதான அஜித் பவார், மராட்டிய துணை முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். நிதித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் இருந்துள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
