மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி காலமானார்… பிரபலங்கள் இரங்கல்!

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி நீலாம்பன் பாரிக் வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு வயது 92. இவர் சமூக சேவையிலும் எழுத்துலகிலும் பெரும் பங்களிப்பு செய்தவர். இவர் நவ்சாரியில் உள்ள தங்குமிடத்தில் இயற்கை எய்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர், காந்தியடிகள் மற்றும் அவரது மகன் ஹரிலாலுடன் தொடர்புடைய வாழ்க்கைப் பின்னணியைச் சொல்வதோடு, அதன் உணர்வுப்பூர்வமான நெருக்கத்தையும் பதிவு செய்த புகழ்பெற்ற நூலை எழுதியவர்.காந்தியின் மகன் ஹரிலால் காந்தி மற்றும் அவரது மனைவி குலாப் ஆகியோரின் மகளான ராமிபென் என்பவரின் மகள் இந்த நீலாம்பன் பாரிக்.
பெண்கள் கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் ‘தட்சிணாபதா’ என்ற அமைப்பைத் தொடங்கி, பழங்குடி பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்தவர். அந்த அமைப்பின் மூலம் பல பெண்களுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டது.
நீலாம்பன் பாரிக், மறைந்த யோகேந்திரபாய் பாரிக்கின் வாழ்க்கைத் துணைவி. இவருடைய மகன் சமீர் பாரிக் மருத்துவ நிபுணராக உள்ளார். நீலாம்பனின் மறைவு காந்தி குடும்பத்திற்கும், சமூக சேவையளிக்கும் உலகத்திற்கும் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!