பெண்களுக்கு ”மகிளா சம்மன்” புதிய சேமிப்பு திட்டம் !!

 
பெண்கள் சேமிப்பு

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் புதிய திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

நிர்மலா சீதாராமன் ஜிடிபி
மத்திய  பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது.  இது குறித்து நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையில்  இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான முறையில் வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும்  இந்த உரையில், சிறு சேமிப்பு திட்டங்கள் குறித்து பெண்களுக்கு மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்ற புதிய சிறு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த புதிய திட்டத்தில்  ஒரு முறை மட்டும் முதலீடு செய்ய வேண்டும். 2025 மார்ச் மாதம் வரை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்

மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் பெண்கள், சிறுமிகள் பெயரில் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தில் 7.5% என்ற நிலையான வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதில்  டெபாசிட் செய்த தொகையில் பாதி தொகையை எடுத்துக்கொள்வதற்கான வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மகளிரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web