தனி விமானத்தில் சொந்த ஊருக்கு வந்தது மேஜர் ஜெயந்தின் உடல்.. அரசு மரியாதையுடன் உடல் தகனம்!

 
ஜெயந்த்


மார்ச் 16ம் தேதி வியாழக்கிழமை நேற்று முன்தினம்  அருணாச்சல பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் உயிரிழந்தார். அருணாச்சலப்பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் சங்கே கிராமத்தில் இருந்து  நேற்று முன் தினம் காலை 9  மணியளவில் ராணுவ ஹெலிக்காப்டரில் லெப்டினன்ட் மற்றும் மேஜர் ஆகியோர், அஸ்ஸாம் மாநிலம் சோனிப்பூர் நோக்கி புறப்பட்டனர்.  புறப்பட்ட 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து போம்டிலாவின் மேற்கே மண்டலா ஹில்ஸ் பகுதிக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது. இந்த விபத்தில் லெப்டினன்ட் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் இருவரும் உயிரிழந்தனர். இதில் மேஜர் ஜெயந்த் குடும்பத்திற்கு ரூ20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இராணுவ பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டம் இராணுவ அலுவலர் மேஜர் ஜெயந்த் உட்பட இரண்டு இராணுவ அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். அரசு சார்பில்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சென்று, தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய இராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திட அறிவுறுத்தியுள்ளேன்.

ஜெயந்த்

 தாய்நாடு காக்கும் பணியில் தன் இன்னுயிரை ஈந்த மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்தினருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அத்துடன் அவர்களுக்கு ரூ20 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் எனத்  தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் நேற்று நள்ளிரவு தனி விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயமங்கலத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  பின்னர், அரசு மரியாதையுடன் ஜெயமங்கலம் மாயணத்தில் மேஜர் ஜெயந்த் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web