இந்தியாவில் 1990 முதல் இன்று வரை முக்கிய விமான விபத்து உயிரிழப்புகள்... ஒரு பார்வை!

 
விமான விபத்து

 

 

 

குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து போயிங் 787-8 ரக ஏர் இந்தியா விமானம், லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற சில நொடிகளிலேயே மாணவர் விடுதியில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், பெரும்பாலானோர் உயிர்ப் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. விமானம் மோதிய கட்டடத்தின் சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

1990 முதல் இன்று வரையில் நிகழ்ந்த சில முக்கிய விமான விபத்துகள் 

பிப்ரவரி 1990 - ஏர் லைன்ஸ்

பிப்ரவரி 14, 1990 ல் பெங்களூரில் இருந்து மும்பைக்கு செல்லவிருந்த ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் விடி-இபிஎன் தரையில் இருந்து 2300 அடி உயரத்துக்கு சென்ற நிலையில், கீழே விழுந்து விபத்தானது. 2 விமானிகள், 5 விமான ஊழியர்கள், 4 கைக்குழந்தைகள் உள்பட 146 பேர் பயணம் செய்த இந்த விமான விபத்தில் 92 பேர் பலியாகினர்.

விமான விபத்து

 

ஆகஸ்ட் 1991 - இந்தியன் ஏர்லைன்ஸ்

ஆகஸ்ட் 16, 1991 ல் கொல்கத்தாவில் இருந்து இம்பால் (மணிப்பூர்) சென்ற இந்தியன் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விடீ-இஎஃஃப்எல் விமானம், இம்பால் விமான நிலையத்தில் இருந்து 30.04 கி.மீ. தொலைவில் வெடித்துச் சிதறியது. விமானம் முற்றிலும் வெடித்துச் சிதறியதில், விமானத்தில் இருந்த 69 பேரும் பலியாகினர்.

 

டிசம்பர் 1994 - இந்தியன் ஏர்லைன்ஸ்

டிசம்பர் 17, 1994ல் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு இந்தியன் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் விடீ-இபிஎம் விமானம் செல்லவிருந்த நிலையில், விமான ஓடுதளத்தில் குறுக்கே இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்றபோது, அவர் மீது விமானம் மோதி, அவரது உடலை இழுத்துச் சென்று, விமான ஓடுதளம் முழுவதும் சிதறடித்தது.

 

நவம்பர் 1996 - சௌதி அரேபியன் போயிங்

நவம்பர் 12, 1996 ல் டெல்லியில் இருந்து தெஹ்ரானுக்கு 312 பேரை ஏற்றிச் சென்ற சௌதி அரேபியன் போயிங் விமானமும், 37 பேரை ஏற்றிச் சென்ற கஜகஸ்தானில் இருந்து டெல்லிக்கு அழைத்து வந்த விமானமும் வான்வெளியில் மோதி விபத்தானது. இந்த விபத்தில் 2 விமானங்களிலும் பயணித்த 349 பேரும் பலியாகினர்.

 
ஏப்ரல் 2004 - ஜக்கூர்

ஏப்ரல் 17, 2004 ஆம் ஆண்டில், அக்னி ஏரோஸ்போர்ட்ஸ் அட்வென்சர்ஸ் அகாதெமியின் விமானம், ஜக்கூர் விமான நிலையத்தில் இருந்து நாடிர்கலுக்கு செல்லவிருந்த நிலையில், நிலத்தில் மோதி விபத்தானது. இந்த விபத்தில்தான், நடிகை சௌந்தர்யாவும் பலியானார்.

மீண்டும் ஆமதாபாத்தில் இருந்து விமான சேவை தொடக்கம்!  

அக்டோபர் 2008, கிங் ஏர்

அக்டோபர் 29, 2008 ல் சண்டிகரில் இருந்து லூதியானா சென்ற கிங் ஏர் நிறுவனத்தின் சி-90 விமானத்தில் ஏற்பட்ட தகவல் தொடர்பு பிரச்சனையால், நிலத்தில் மோதி விபத்தானது. இந்த விமானம் எரிந்ததில் விமானிகள் இருவரும் பலியாகினர்.மே 2010 - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மே 22, 2010 ல் துபாயில் இருந்து மங்களூருக்கு 166 பேருடன் வந்து கொண்டிருந்த ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX-812 விமானம், வனப்பகுதி அருகே தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 158 பேர் பலியாகினர்.

ஜூலை 2016

ஜூலை 22, 2016 ம் ஆண்டில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 விமானம், வங்காள விரிகுடாவில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 29 பேர் பலியாகினர்.

ஜூன் 2019

ஜூன் 3, 2019 ம் ஆண்டில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 விமானம், தகவல் தொடர்பை இழந்ததால், அருணாச்சலப் பிரதேசத்தில் மலைப்பாங்கான பகுதியில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் பலியாகினர்.

ஆகஸ்ட் 2020 - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

ஆகஸ்ட் 7, 2020 ல் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு 190 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX-1344 விமானம், தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தாக்கில் விழுந்து இரு துண்டுகளாக பிரிந்தது. இந்த விபத்தில், 21 பேர் பலியாகினர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாதில் ஜூன் 12ம் தேதி வியாழக்கிழமையில் ஏர் இந்தியா விமானம் AI171 கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்தவர்களில் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது