பொன்னம்பலமேட்டில் தென்பட்ட 'மகர ஜோதி'... சபரிமலையில் விண்ணைப் பிளந்த 'சரண கோஷம்' - லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

 
சபரிமலை மகரஜோதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மகரவிளக்கு பூஜையின் மிக முக்கிய நிகழ்வான மகர ஜோதி தரிசனம் இன்று மாலை 6.40 மணியளவில் பொன்னம்பலமேட்டில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகக் காத்திருக்க, பந்தளம் அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் புனிதமான 'திருவாபரணங்கள்' அடங்கிய பெட்டிகள் இன்று மாலை 6.20 மணிக்குச் சன்னிதானத்தைச் சென்றடைந்தன.

திருவாபரணப் பெட்டிகளுக்குப் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டு, பின்னர் ஐயப்பனுக்குத் திருவாபரணங்கள் சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனை முடிந்த சில நிமிடங்களில், சரியாக மாலை 6.40 மணியளவில் சபரிமலைக்கு எதிரே உள்ள பொன்னம்பலமேட்டில் 'மகர ஜோதி' மூன்று முறை பிரகாசமாகத் தென்பட்டது.

மகர ஜோதி

ஜோதியைக் கண்ட அந்த விநாடியில், சபரிமலை முழுவதும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கைகளை உயர்த்திக் கூப்பி, 'சுவாமியே சரணம் ஐயப்பா' என முழக்கமிட்டனர். இந்தச் சரண கோஷம் சபரிமலை முழுவதும் எதிரொலித்தது.

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் இன்று வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது. இதையொட்டி, கேரளா போலீஸார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். குறிப்பாக, புல்மேடு மற்றும் பாண்டித்தாவளம் போன்ற ஜோதி தெரியும் இடங்களில் கூடுதல் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!