நாளை மகரவிளக்கு பூஜை... ஸ்பாட் புக்கிங்கில் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!

 
சபரிமலை கூட்டம்

உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை, நடைபெற உள்ளது. இதற்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன்  நாளை பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மாலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் டிசம்பர்  11ம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில்  மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரண பெட்டி  நேற்று பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் நாளை மாலை 6.30 மணிக்கு சபரிமலை சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

சபரிமலை
இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5000க்கும்  அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக இன்றும், நாளையும்  ஆன்லைனில் 50,000, ஸ்பாட் புக்கிங்கில் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15ம் தேதி ஆன்லைன் புக்கிங்கில் 60,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 16ம் தேதி முதல் வழக்கமான முறையில் புக்கிங் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை
இந்நிலையில் நாளை காலை 7 மணியிலிருந்து நிலக்கல்லில் இருந்து போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வரை மட்டுமே பம்பை வரை போக்குவரத்து இயக்கம் இருக்கும். 12 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை. ஜனவரி 19ம் தேதி இரவு 10 மணி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். அன்று வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.ஜனவரி 20ம் தேதி காலை 7 மணிக்கு சபரிமலையுடன்  மகர விளக்கு காலம் நிறைவடைந்து கோயில் நடை சாத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web