மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி பங்குனித் தெப்பத் திருவிழா! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

 
மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் பங்குனி தெப்பத் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தென் கயிலாயம் என்று போற்றப்படுவதும், திருச்சிக்கு பெருமை சேர்ப்பதும், புகழ் பெற்றதுமான மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.பிற மாவட்டங்களில் மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.

திருச்சி ஸ்ரீரங்கம் தெப்பம்

ஒவ்வொரு வருடமும் இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.  பங்குனி உத்திர திருவிழாவைக் காண வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய பங்குனி திருவிழாவின் 9ம் நாளான நேற்று தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மலைக்கோட்டை தாயுமானவர்

முன்னதாக தாயுமானவர் சுவாமி (சிவபெருமான்), மட்டுவார் குலழி அம்பாளுடன் வாகன மண்டபத்திலிருந்து புறப்பட்டு  உள் வீதி, சின்னக் கடை வீதி, என்.எஸ்.பி ரோடு வழியாக வீதி உலா வந்து தெப்ப தீர்த்தக் குளத்தை வந்தடைந்தார். அங்கு வண்ண மயமான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் விநாயகர் மற்றும் முருகன் வள்ளி தெய்வாணையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பின்னர்; தெப்பமானது தீர்த்தக் குளத்தில் 5 முறைகளாக வலம் வந்து ஆண்டாள் வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது. தெப்பத் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்து தரிசித்தனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web