பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி காலமானார்... திரையுலகினர் இரங்கல்!

பிரபல மலையாள திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ஷாஜி என்.கருண் நேற்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73
1989ல் வெளியான ‘பிறவி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன ஷாஜி கருண், ரசிகர்களிடையே பரவலாக கவனத்தை ஈர்த்தார். அவரது முதல் படமான ‘பிறவி’ பெரிதும் கொண்டாடப்பட்டு, கேன்ஸ் திரைப்பட விழாவிலும் கெளரவிக்கப்பட்டது. இது சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதுகளையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஷாஜியின் கலைச்சேவைக்காக கடந்த 2011ல், நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
1970 காலகட்டங்களில் மலையாள திரைத்துறை முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர்களில் முன்னோடியாகத் திகழ்ந்த ஷாஜி என்.கருண் பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
பிறவி, ஸ்வாஹம், வனபிரஸ்தம் உள்பட இவரது திரைப்படங்கள் பல விருதுகளை குவித்துள்ளன. கேரள மாநில சாலசித்திர அகாதெமி, கேரள மாநில திரைப்பட மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!