ஆஸ்திரேலியாவை தொடர்ந்து மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை!

 
சமூக ஊடகம்
 

ஆஸ்திரேலியாவின் போக்கு போல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் கணக்குகள் திறக்க தடை விதிக்க மலேசியா முடிவு செய்துள்ளது. 2026 முதல் அமலாகவுள்ள இந்தத் திட்டம், குழந்தைகளை இணையவழி மிரட்டல், மோசடி, பாலியல் சுரண்டல் போன்ற ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று மலேசிய தகவல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.

வயதை உறுதிப்படுத்த அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றின் மின்னணு சரிபார்ப்பு முறைகள் பரிசீலிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நடைமுறைக்கு வந்த விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடையை அடுத்த மாதம் 10 ஆம் தேதி அமல்படுத்த உள்ளது. டென்மார்க், நோர்வே உள்ளிட்ட நாடுகளும் 15 வயதுக்குட்பட்டோருக்கு இதே மாதிரியான தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!