பொதுத்தேர்வில் முறைகேடு?! 32 பேரின் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டம்!!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியதாக புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டதால் தேர்வு கண்காணிப்பாளர் உட்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். மே 8ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
குறிப்பிட்ட அரசு உதவி பெறும் பள்ளியில் அறை எண் 3 மற்றும் 4ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கணித பாடத்திற்கான தேர்வு முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது 34 மாணவர்களும் கணித தேர்வில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவால் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இதில் சில மாணவர்கள் நீட் தேர்வுக்காக தயாராகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவே முறையாக விசாரணை நடத்தி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி இருந்தனர். நீலகிரியில் 12ம் வகுப்பு கணிதத் தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் தவிர 32 பேரின் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நல்ல ஒழுக்கமான வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்களே பேராசையினால் செய்த தவறுக்கு, 34 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி நிற்கிறது. ஆசிரியர்கள், கணிதப்பாடம் பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு உதவி செய்ததாக எழுந்தது. குற்றச்சாட்டில், உதகை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தேர்வு எழுதிய 34 மாணவர்களின் கணிதத் தேர்வின் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த குறிப்பிட்ட வகுப்பறையில் தேர்வெழுதிய 34 மாணவர்களும், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் கணித தேர்வில் தோல்வி அடைந்ததாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. .
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!