மாமல்லபுரத்தில் கோலாகலம்... விஜய் பங்கேற்கும் இஃப்தார் விருந்து!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் புனித ரமலான் மாத இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள 'ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன்' என்ற தனியார் நட்சத்திர விடுதியில் இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சுமார் 6:22 மணியளவில் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. தவெக தலைவர் விஜய், இன்றைய இஃப்தார் நிகழ்ச்சிக்காக இன்று காலை முதலே நோன்பு கடைப்பிடித்து வருவதாகவும், மாலை 6:22 மணிக்கு அனைவருடன் இணைந்து நோன்பு திறப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,000 இஸ்லாமியப் பெரியவர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோருக்கு மட்டுமே முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்; பொதுமக்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் விஜய்யின் வருகையையொட்டிப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் இந்த ஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருடனான இந்தச் சந்திப்பு, விஜய்யின் தேர்தல் பிரச்சார யுக்திகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சிறுபான்மையின மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் இந்த இஃப்தார் விருந்து மிகக் கவனமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
