"அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் பென் டிரைவ் என்னிடம் உள்ளது” - மம்தா பானர்ஜி அதிரடி!
கொல்கத்தாவில் நேற்று நடந்த பிரம்மாண்ட கண்டனப் பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, பாஜக-வின் முக்கியத் தலைவர்கள் மீது நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
"மேற்கு வங்கத்தில் நடந்த நிலக்கரி ஊழல் பணம், பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மூலம் டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு சென்று சேர்ந்துள்ளது. அதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ள ஒரு பென் டிரைவில் சேமிக்கப்பட்டுள்ளன" என மம்தா அறிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஐடி பிரிவுத் தலைவர் வீட்டில் சமீபத்தில் நடந்த அமலாக்கத்துறை (ED) சோதனையைக் கண்டித்த அவர், "என்னைத் தூண்டிவிட்டால் நான் யாரையும் விடமாட்டேன்; தேவைப்படும்போது இந்த ஆதாரங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவேன்" என எச்சரித்தார்.
நிலக்கரி கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணம் பாஜகவின் தேர்தல் நிதிக்கும், டெல்லி மேலிடத் தலைவர்களுக்கும் முறையாகப் பகிரப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
