பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேரை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது... 2 பேரும் குழந்தைகளுடன் தவிப்பு!

 
கர்ப்பம் காதல்

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த 22 வயதுடைய டிப்ளமோ முடித்த பிரவீன் எனும் இளைஞர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் என இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருத்தர் என காதலித்து, இருவரையும் கர்ப்பமாக்கிய சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், 15 வயதுச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளைஞர் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் (22). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். பிரவீனுக்கும், ஊட்டியிலுள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயதுச் சிறுமி ஒருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில், மீண்டும் சமாதானமாகிப் பழகத் தொடங்கிய போது சிறுமியை பிரவீன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

இந்த இடைப்பட்ட காலத்தில், ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் மற்றொரு மாணவியுடனும் பிரவீன் பழகி வந்துள்ளார்.அவரையும் காதலிப்பதாகக் கூறி நெருங்கிப் பழகியுள்ளார். கர்ப்பமான கல்லூரி மாணவியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரவீன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

காதல்

இந்நிலையில், கடந்த டிசம்பர் 3ம் தேதி பள்ளி மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால், அவரது தாயார், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த சில நிமிடங்களிலேயே அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும், ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிரவீன் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியது உறுதியானது. இதையடுத்து பிரவீன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

பிரவீன் சிறைக்கு சென்ற நிலையில், ஒரே நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் இரு கைக்குழந்தைகளுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!