ரயில் தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் எடுத்தவர் கைது!

இந்நிலையில், ரயில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு, ரயில் வரும்போது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்தவரைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஹசன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சவுராசியா. இவர் செல்போனில் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் குஸும்பி ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்ற ரஞ்சித் சவுராசியா, தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு ரயில் வரும்போது தனது செல்போனில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான முறையில் இப்படி இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக ரஞ்சித் சவுராசியா இப்படி தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு வீடியோ பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் அவர் எடுத்த வீடியோவை, சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார்.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பலரும் அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த வீடியோ வைரலாகி, ரயில்வே போலீசாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, ரயில்வே போலீசார், சவுராசியா மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!