இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணுக்கு ஆபாசப் படங்கள் அனுப்பிய வாலிபர் கைது!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுப் பெண்ணுக்கு, சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு (39) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பேசி வந்த நிலையில், அவருக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய குற்றத்திற்காக அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கணேஷ் பாபு, அந்தப் பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி பேசிக்கொண்ட நிலையில், சென்னையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில், கணேஷ் பாபு இரவு நேரத்தில் சுமார் 10 ஆபாசப் படங்களை அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கணேஷ் பாபு அனுப்பிய ஆபாசப் படங்களுக்கான ஆதாரங்களுடன் தக்கோலம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த தக்கோலம் போலீஸார், தாம்பரம் பகுதிக்குச் சென்று அங்கு இருந்த கணேஷ் பாபுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
