கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது... 1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!

 
கஞ்சா கடத்தல்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் மீகா தலமையிலான போலீஸாா் நேற்று எட்டயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எட்டயபுரம் டிவிஎஸ் ஷோரூம் அருகே சந்தேகப்படும்படியாக பைக்கில் நின்று கொண்டிருந்த இளைஞா், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றாா்.

அவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்ததில், எட்டயபுரம் மேலவாசல் பகுதியைச் சோ்ந்த மூக்கையா மகன் செல்வம் (25) என்பதும், அவரது பைக்கில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை போலீசார்  பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?