டாஸ்மாக் பாரில் பணம் திருடிய வாலிபர் கைது!
தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் பணத்தை திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம், அன்னை வேளாங்கன்னி நகரைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கனிராஜா (55). இவர் பூப்பாண்டியாபுரத்தில் உள்ள அரசு மதுபானக் கடை அருகில் பார் நடத்தி வருகிறார். கடந்த 10ம் தேதி கடையை பூட்டிவிட்டு சென்ற பின்னர் மறுநாள் 12 மணிக்கு கடையை திறக்க வந்துள்ளார்.

அப்போது கல்லா பெட்டியில் இருந்த ரூ.3,000 பணம் திருடு பேயிருந்தது. இது குறித்து அவர் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் சக்திவேல் (28) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
