மருதமலை வேல் கோட்டம் மடத்தில் வெள்ளி வேல் திருடியவர் கைது!

 
மாற்றுத்திறனாளி

 தமிழகத்தில்  கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில், வேல் கோட்டம் என்ற தனியாருக்கு சொந்தமான மடத்தில் இரண்டரை அடி உயரத்தில், ரூ.4 லட்சம் மதிப்பில் வெள்ளியிலால் ஆன வேல் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வரப்படுகிறது. 

மருதமலை

இந்நிலையில், கடந்த 3ம் தேதி இந்த வெள்ளி வேல் திருடு போனது. மொட்டையடித்த நபர் ஒருவர் சாமியார் போல் காவி உடையணிந்து கொண்டு மடத்துக்குள் நுழைவதும், அங்கிருந்த வெள்ளி வேலை எடுத்து தனது சட்டைக்குள் மறைத்துக் கொண்டு வேகமாக மடத்தில் இருந்து வெளியே செல்வதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. 

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் காரணமாக, அடிவாரத்தில் பணியில் இருந்த போலீசாரின் கண்காணிப்பையும் மீறி, மடத்துக்குள் நுழைந்து ஒருவர் வேலை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

மருதமலை

இது குறித்த புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் விசாரித்து வந்தனர். மருதமலை அடிவாரப் பகுதியில் சுற்றிய ஒருவரை நேற்று முன்தினம் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது, வெள்ளி வேலை திருடியவர் என்பதும், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையைச் சேர்ந்த வெங்கடேச சர்மா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து, அவரிடம் இருந்து வெள்ளி வேலை பறிமுதல் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?