பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது!
Apr 14, 2025, 13:35 IST

திருச்சி மாவட்டம் உறையூர் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகிம் பாதுஷா (28). ஐஸ் வியாபாரியான இவர் வீட்டில் ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக உறையூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உறையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து தென்காசியில் தலைமறைவாக இருந்த இப்ராஹிம் பாதுஷாவை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஒரு குடியிருப்பில் உள்ள பொது கழிப்பறையில் செல்போனை மறைத்து வைத்து, பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்ததும், அதை உறவினர் ஒருவருக்கு அனுப்பியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஆதாரங்களை அழிப்பதற்காக இப்ராஹிம் பாதுஷாவின் செல்போனை அவரது மனைவி உடைத்து நொறுக்கி விட்டதாக மக்கள் அளித்த புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web