சென்னையில் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - இளைஞர் கைது!

 
கிண்டி காவல் நிலையம்

சென்னை கிண்டியில் உள்ள ஒரு கட்டிடப் பொறியாளரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்டி, ஈஸ்வரி ரத்தினம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராம் நித்திஷ் (26). இவர் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இவரது கார் திடீரெனத் தீப்பற்றி எரிவதைக் கண்ட நித்திஷ், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தார். இந்தச் சம்பவத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இது குறித்து ராம் நித்திஷ் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அந்தக் காட்சிகளின் அடிப்படையில், கிண்டி, மடுவாங்கரை பகுதியைச் சேர்ந்த விஜய பிரபாகரன் (25) என்பவர், பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து அந்தக் காரின் மீது வீசியது தெரிய வந்தது. இதையடுத்து, உடனடியாக விஜய பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது

கைது செய்யப்பட்ட விஜய பிரபாகரனிடம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் மதுபோதைக்குப் பழக்க அடிமையானவர் என்றும், இரண்டு முறை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. விஜய பிரபாகரன் எதற்காக இந்தச் செயலைச் செய்தார் என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!