மது குடிப்பதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை!

 
போதை டாஸ்மாக்

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே மதுகுடிப்பதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள செட்டிவிளையை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் தினேஷ் (22). இவர் சென்னையில் உள்ள மளிகைகடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அங்கேயே தங்கி கடையில் வேலை பார்த்து வந்த அவர், அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வார் என்று கூறப்படுகிறது.

பள்ளி மானவி தற்கொலை

இந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் செட்டிவிளைக்கு வந்துள்ளார். அவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்று பெற்றோர், உறவினர்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அவர் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் பெற்றோர், மது குடிப்பதை கைவிடுமாறு அவரை கண்டித்துள்ளனர்.

தூக்கிட்டு தற்கொலை

இதில் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்ததும் மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று, அவரது உடலைக் கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?