காதல் மனைவி டார்ச்சர் தாங்காமல் கணவன் வீடியோ வெளியிட்டு தற்கொலை!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் போபால் மாவட்டத்தில் வசித்து வருபவர் அபிஷேக் பசாலி. இவருக்கு வயது 25. இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 4 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றனர்.
இந்நிலையில் அபிஷேக் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே தகராறு ஏற்பட்டு வந்தது. அத்துடன் மனைவி மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து அவருக்கு மனரீதியாக தொல்லைகள் கொடுத்து வந்தனர். கணவர் தன்னை டார்ச்சர் செய்வதாக கூறி காவல் நிலையத்திலும் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
இதனால் அபிஷேக் மன வேதனையில் இருந்த நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் தன்னுடைய மனைவி மற்றும் மகளை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வந்த அபிஷேக் பின்னர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதில் தன்னுடைய மனைவி மற்றும் மாமியார் மனரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுப்பதால் தற்கொலை செய்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அபிஷேக் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!